ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில், எர்பில் மாகாணத்தின் பல பகுதிகளில் மக்கள் பெரும் வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற கத்தாயிப் ஹிஸ்புல்லா அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தாக்குதல் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்கத் தளத்தை குறிவைத்த ட்ரோன் தாக்குதல் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில், எர்பில் மாகாணத்தின் பல பகுதிகளில் மக்கள் பெரும் வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற கத்தாயிப் ஹிஸ்புல்லா அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தாக்குதல் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.இந்தச் சம்பவம், பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.