முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.
இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்தன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விற்பவருக்கும் அடிமையானவர்களுக்குமான அறிவித்தல் அகன்று செல் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் என்று பொறிக்கப்பட்ட 1818 அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்கள் பொறிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துதல், இதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட சமூக உரையாடலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அரசாங்க அமைச்சுகள் உட்பட அனைத்து இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு, கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களைத் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வு மற்றும் பிரச்சார நிகழ்வு இன்று காலை கிண்ணியாவில் நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அரச நிர்வாகச் சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி G.H. பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பில் சமூகத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களிடம் உரையாற்றிய பொறுப்பதிகாரி, "போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதிலும், அது தொடர்பான தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்குவதிலும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மிக முக்கிய பங்கு வகிக்க முடியும். ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் உங்கள் ஒத்துழைப்பு அவசியமானது," எனக் குறிப்பிட்டார்.
இதன்போது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் (Stickers) பொலிஸாரினால் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.
"போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" நாடளாவிய ரீதியில் ஆரம்பம் - முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விழிப்புணர்வு முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்தன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.இதன்போது விற்பவருக்கும் அடிமையானவர்களுக்குமான அறிவித்தல் அகன்று செல் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் என்று பொறிக்கப்பட்ட 1818 அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்கள் பொறிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துதல், இதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட சமூக உரையாடலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்க அமைச்சுகள் உட்பட அனைத்து இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களைத் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வு மற்றும் பிரச்சார நிகழ்வு இன்று காலை கிண்ணியாவில் நடைபெற்றது.போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அரச நிர்வாகச் சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி G.H. பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், போதைப்பொருள் ஒழிப்பில் சமூகத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.முச்சக்கர வண்டி ஓட்டுநர்களிடம் உரையாற்றிய பொறுப்பதிகாரி, "போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதிலும், அது தொடர்பான தகவல்களை உரிய தரப்பினருக்கு வழங்குவதிலும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மிக முக்கிய பங்கு வகிக்க முடியும். ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் உங்கள் ஒத்துழைப்பு அவசியமானது," எனக் குறிப்பிட்டார். இதன்போது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் (Stickers) பொலிஸாரினால் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டன.