• Nov 22 2024

வறட்சியான வானிலை; ஆபத்தான நிலையில் 18 நீர் ஆதாரங்கள்! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Chithra / Mar 19th 2024, 9:20 am
image

 

நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையே இதற்கு காரணம் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரை பயன்படுத்த வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேருவளை, அளுத்கம, நிவித்திகல, நாரம்மல, கம்போலவத்தை, புஸ்ஸல்லாவ, அங்கும்புர, மீவதுர, புஸ்ஸெல்ல, ரத்தோட்டை, ஹட்டன், கொட்டகலை, ஊருபொக்க, புத்தல, சூரியஹார ஆகிய பகுதிகளுக்கு கண்காணிப்பு அமைப்பின் கீழ் 16 நீர் விநியோக அமைப்புகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை, வாத்துவை, எஹெலியகொட மற்றும் ரதம்பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்போது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால், அந்த பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வறட்சியான வானிலை; ஆபத்தான நிலையில் 18 நீர் ஆதாரங்கள் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்  நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையே இதற்கு காரணம் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரை பயன்படுத்த வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பேருவளை, அளுத்கம, நிவித்திகல, நாரம்மல, கம்போலவத்தை, புஸ்ஸல்லாவ, அங்கும்புர, மீவதுர, புஸ்ஸெல்ல, ரத்தோட்டை, ஹட்டன், கொட்டகலை, ஊருபொக்க, புத்தல, சூரியஹார ஆகிய பகுதிகளுக்கு கண்காணிப்பு அமைப்பின் கீழ் 16 நீர் விநியோக அமைப்புகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதேவேளை, வாத்துவை, எஹெலியகொட மற்றும் ரதம்பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்போது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால், அந்த பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.மேலும் லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement