நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேசங்களில் மாடுகள் ஆபத்தான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளன.
பல பசுக்கள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாது மயங்கி விழுந்துள்ளன. ஒரு சில பசுக்கள் இறந்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் பல மாடுகள் மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்லும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, அவசர சிகிச்சைகளை அளித்து மாடுகளை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகின்றார் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைத்தல், கரைகுட்டி பிரசவித்தல் போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன.
எனவே போதியளவு நீர் அருந்தும் வகையிலும் கடும் வெயில் நேரங்களில் வெட்டை வெளியில் கட்டிவைத்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கால்நடை வளர்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடும் வெப்பத்தினால் ஊர்காவற்துறையில் மாடுகள் ஆபத்தான நிலையில் நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேசங்களில் மாடுகள் ஆபத்தான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளன.பல பசுக்கள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாது மயங்கி விழுந்துள்ளன. ஒரு சில பசுக்கள் இறந்துள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் பல மாடுகள் மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்லும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, அவசர சிகிச்சைகளை அளித்து மாடுகளை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகின்றார் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அதிக வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைத்தல், கரைகுட்டி பிரசவித்தல் போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன. எனவே போதியளவு நீர் அருந்தும் வகையிலும் கடும் வெயில் நேரங்களில் வெட்டை வெளியில் கட்டிவைத்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் கால்நடை வளர்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.