• Oct 20 2024

தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து உயிரிழந்த சிசு! யாழில் சம்பவம் samugammedia

Chithra / Apr 12th 2023, 9:16 pm
image

Advertisement

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு நேற்று (11) குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

பிரசவ ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து, சிசுவிற்கு குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பருத்தித்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து உயிரிழந்த சிசு யாழில் சம்பவம் samugammedia பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணுக்கு நேற்று (11) குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.பிரசவ ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து, சிசுவிற்கு குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா தெரிவித்தார்.இதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பருத்தித்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement