• Nov 24 2024

டிக்கோயா டங்கள் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் வீதியின் சீரின்மையால் மக்கள் பெரும் சிரமம் - மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!samugammedia

Anaath / Dec 20th 2023, 11:45 am
image

நுவரெலியா டிக்கோயாவில் அமைந்துள்ள டங்கள் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிடாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால்  அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக அத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 1990 காலப் பகுதியில் அந்த பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை பாடசாலை இயங்கி வந்தது எனவும், அதன் பின்னர் அப் பாடசாலை கீழ் பிரிவிற்கு கொண்டு செல்ல பட்டது இதனால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் , சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாடசாலை படிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வீதி படு மோசமான நிலையில் உள்ளது எனவும், அத்துடன் சிறுவர்கள் இந்த வீதியில் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் புலி, பன்றிகள், கரு நாகம் போன்ற வன விலங்குகள் நச்சு பாம்புகள் உள்ளது என பீதியில் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சிய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

110 குடும்பங்களைச் சார்ந்த 400 க்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் உள்ளனர் எனவும் இவர்களில் பாடசாலை மாணவர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.எனவும் தெரிவிதுள்ளனர். 

மேலும் இதில் தரம் 11 வரை கீழ் பிரிவில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலவும் அதன் பின்னர் க.பொ.த.உயர் தரத்தை மஸ்கெலியா அல்லது ஹட்டன், டிக்கோயா.நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்ல வேண்டும்.போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாத காரணத்தால் கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது உள்ளதாக அத் தோட்டத்தில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

முறையாக போக்குவரத்துச்சாலை  வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்களின் பிரசவம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முன் இந்த வீதியில் பல முறை இடம் பெற்று உள்ளது எனவும் நோயாளிகள் பலர் இறந்துள்ளதாகவும் அங்கு உள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்கோயா டங்கள் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் வீதியின் சீரின்மையால் மக்கள் பெரும் சிரமம் - மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.samugammedia நுவரெலியா டிக்கோயாவில் அமைந்துள்ள டங்கள் தோட்ட மேற் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிடாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால்  அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக அத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 1990 காலப் பகுதியில் அந்த பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை பாடசாலை இயங்கி வந்தது எனவும், அதன் பின்னர் அப் பாடசாலை கீழ் பிரிவிற்கு கொண்டு செல்ல பட்டது இதனால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.மேலும் , சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பாடசாலை படிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வீதி படு மோசமான நிலையில் உள்ளது எனவும், அத்துடன் சிறுவர்கள் இந்த வீதியில் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் புலி, பன்றிகள், கரு நாகம் போன்ற வன விலங்குகள் நச்சு பாம்புகள் உள்ளது என பீதியில் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சிய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.110 குடும்பங்களைச் சார்ந்த 400 க்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் உள்ளனர் எனவும் இவர்களில் பாடசாலை மாணவர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.எனவும் தெரிவிதுள்ளனர். மேலும் இதில் தரம் 11 வரை கீழ் பிரிவில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலவும் அதன் பின்னர் க.பொ.த.உயர் தரத்தை மஸ்கெலியா அல்லது ஹட்டன், டிக்கோயா.நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலைக்கு செல்ல வேண்டும்.போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாத காரணத்தால் கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது உள்ளதாக அத் தோட்டத்தில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.முறையாக போக்குவரத்துச்சாலை  வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்களின் பிரசவம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முன் இந்த வீதியில் பல முறை இடம் பெற்று உள்ளது எனவும் நோயாளிகள் பலர் இறந்துள்ளதாகவும் அங்கு உள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement