• Dec 14 2024

நிலவும் சீரற்ற காலநிலை..! கொழும்பு - பதுளை இரவு அஞ்சல் புகையிரத சேவை ரத்து..!

Sharmi / Nov 26th 2024, 4:19 pm
image

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் தொடரூந்து சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, பதுளை அஞ்சல் ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படவிருந்த நிலையிலேயே அஞ்சல் புகையிரத சேவை ரத்து  செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது மலையகப் பாதையில் இயங்கும் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


நிலவும் சீரற்ற காலநிலை. கொழும்பு - பதுளை இரவு அஞ்சல் புகையிரத சேவை ரத்து. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் தொடரூந்து சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.அதேவேளை, பதுளை அஞ்சல் ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படவிருந்த நிலையிலேயே அஞ்சல் புகையிரத சேவை ரத்து  செய்யப்பட்டுள்ளது.அத்துடன், தற்போது மலையகப் பாதையில் இயங்கும் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement