• Feb 17 2026

துனித் வெல்லாலகேவின் தந்தை உயிரிழப்பு ; ஒரு நிமிட அஞ்சலிக்காக மௌனித்த மைதானம்!

shanuja / Sep 20th 2025, 9:42 pm
image

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தைக்காக இன்றைய (20) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர். 


ஆசிய கிண்ணத் தொடரின் போது அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர், தனது தந்தை சுரங்க வெல்லாலகேவின் மரண செய்தியை அறிந்த துனித் வெல்லாலகே, உடனடியாக இலங்கைக்கு திரும்பினார். 


இந்நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதன் பின்னர் துனித் வெல்லாலகே மீண்டும் நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி புறப்பட்டு சென்று அணியுடன் இணைந்திருந்தார். 


துனித் வெல்லாலகேவின் தந்தை, சுரங்க வெல்லாலகே (வயது 54), மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தையின் உயிரிழப்பையடுத்தும் தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக மனதைத் திடப்படுத்திக் கொண்டு அணியில் இணைந்து கொண்ட துனித் வெல்லாலகேவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

துனித் வெல்லாலகேவின் தந்தை உயிரிழப்பு ; ஒரு நிமிட அஞ்சலிக்காக மௌனித்த மைதானம் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தைக்காக இன்றைய (20) பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர். ஆசிய கிண்ணத் தொடரின் போது அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர், தனது தந்தை சுரங்க வெல்லாலகேவின் மரண செய்தியை அறிந்த துனித் வெல்லாலகே, உடனடியாக இலங்கைக்கு திரும்பினார். இந்நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதன் பின்னர் துனித் வெல்லாலகே மீண்டும் நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி புறப்பட்டு சென்று அணியுடன் இணைந்திருந்தார். துனித் வெல்லாலகேவின் தந்தை, சுரங்க வெல்லாலகே (வயது 54), மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தையின் உயிரிழப்பையடுத்தும் தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக மனதைத் திடப்படுத்திக் கொண்டு அணியில் இணைந்து கொண்ட துனித் வெல்லாலகேவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement