• Nov 22 2024

யாழில் மின்னியல் நூலகம் திறந்து வைப்பு...!

Sharmi / Jun 13th 2024, 1:01 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகர சபையால் மின்னியல் நூலகம் ஒன்று இன்று(13)  காலை 11 மணியளவில் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ணவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை செயலாளர் திருமதி தாரணி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு  சிறுவர் மின்னியல் நூலகம், உட்பட மூன்று மின்னியல் நூலக தொகுதிகளும்  நிகழ்வின் பிரதம விருந்தினர் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்கள், அதிகாரிகளுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.

தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, சிறப்பு விருந்தினர்தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் w.சுனில், கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட  யாழ் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் P.சிறிவரன் முன்னாள் தவிசாளர்களான திரு இருதயராசா, வெஎ.நவரட்ணம், நகரசபை செயலாளர் திருமதி தாரணி, உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.

இந்நிகழ்வில், தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண,  தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் w.சுனில், தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணம்  மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் P.சிறிவரன், மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர்களான  இருதயராசா, வே நவரட்ணம், பருத்தித்துறை நகரசபை உத்தியோகஸ்தர்கள், மின்னியல் நூலகத்தில் பயிற்சி பெற்ற அயல் பாடசாலைகளின் மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மின்னியல் நூலகம் திறந்து வைப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகர சபையால் மின்னியல் நூலகம் ஒன்று இன்று(13)  காலை 11 மணியளவில் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ணவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகரசபை செயலாளர் திருமதி தாரணி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு  சிறுவர் மின்னியல் நூலகம், உட்பட மூன்று மின்னியல் நூலக தொகுதிகளும்  நிகழ்வின் பிரதம விருந்தினர் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்கள், அதிகாரிகளுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, சிறப்பு விருந்தினர்தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் w.சுனில், கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட  யாழ் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் P.சிறிவரன் முன்னாள் தவிசாளர்களான திரு இருதயராசா, வெஎ.நவரட்ணம், நகரசபை செயலாளர் திருமதி தாரணி, உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.இந்நிகழ்வில், தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண,  தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் w.சுனில், தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணம்  மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் P.சிறிவரன், மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர்களான  இருதயராசா, வே நவரட்ணம், பருத்தித்துறை நகரசபை உத்தியோகஸ்தர்கள், மின்னியல் நூலகத்தில் பயிற்சி பெற்ற அயல் பாடசாலைகளின் மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement