• Sep 08 2024

வாக்குகளுக்காக இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள்! தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த எச்சரிக்கை!

Chithra / Jun 13th 2024, 12:56 pm
image

Advertisement

  

வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், 

ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் அவதானிக்க வெண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும், 

குறித்த கட்சிகளின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்குகளுக்காக இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த எச்சரிக்கை   வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் அவதானிக்க வெண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும், குறித்த கட்சிகளின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement