• Feb 15 2025

அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலை இடம்பெற்ற துயரம்; இளைஞன் உயிரிழப்பு..! - இருவர் வைத்தியசாலையில்!

Chithra / Mar 19th 2024, 9:34 am
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்   இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானொன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வானில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதுடன், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வானின் சாரதி தூங்கியமையால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என நெடுஞ்சாலை சுற்றுலாப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் அதிகாலை இடம்பெற்ற துயரம்; இளைஞன் உயிரிழப்பு. - இருவர் வைத்தியசாலையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்   இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானொன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் வானில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதுடன், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.வானின் சாரதி தூங்கியமையால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என நெடுஞ்சாலை சுற்றுலாப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement