• Jun 30 2026

வெனிசுவேலாவை உலுக்கிய நில அதிர்வு: 1,450 பேர் உயிரிழப்பு – 6.8 இலட்சம் குழந்தைகள் அவசர உதவிக்காக காத்திருப்பு

Chithra / Jun 29th 2026, 10:43 am
image


வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலஅதிர்வுகளால் நாடு முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.


சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இந்த இரட்டை நிலஅதிர்வுகளால் இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,150 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 12,721 பேர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், 774 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா, கொலம்பியா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பல குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளமை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


நிலஅதிர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சர்வதேச நாடுகள் ஆதரவை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் வெனிசுவேலாவிற்கு இந்த இயற்கைப் பேரழிவு மேலும் பாரிய சவாலாக மாறியுள்ளது.


இதற்கிடையில்,   நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் அவசர மனிதாபிமான உதவிகளைத் தேவைப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. மேலும், மொத்தம் 1.8 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையான உதவிக்காக காத்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.


வெனிசுவேலாவிற்கான யுனிசெப் பிரதிநிதி மானுவல் ரோட்ரிக்ஸ் புமாரோல் கூறுகையில், மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருப்பதுடன், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


வெனிசுவேலாவை உலுக்கிய நில அதிர்வு: 1,450 பேர் உயிரிழப்பு – 6.8 இலட்சம் குழந்தைகள் அவசர உதவிக்காக காத்திருப்பு வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலஅதிர்வுகளால் நாடு முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இந்த இரட்டை நிலஅதிர்வுகளால் இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,150 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 12,721 பேர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 774 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா, கொலம்பியா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பல குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளமை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.நிலஅதிர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சர்வதேச நாடுகள் ஆதரவை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் வெனிசுவேலாவிற்கு இந்த இயற்கைப் பேரழிவு மேலும் பாரிய சவாலாக மாறியுள்ளது.இதற்கிடையில்,   நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் அவசர மனிதாபிமான உதவிகளைத் தேவைப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. மேலும், மொத்தம் 1.8 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையான உதவிக்காக காத்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.வெனிசுவேலாவிற்கான யுனிசெப் பிரதிநிதி மானுவல் ரோட்ரிக்ஸ் புமாரோல் கூறுகையில், மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருப்பதுடன், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement