• Mar 04 2026

ஈரானில் நிலநடுக்கம்..! போர் பதற்றத்திற்கு மத்தியில் புதிய சிக்கல்

Chithra / Mar 3rd 2026, 2:17 pm
image



ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. 


இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது அணுசக்தி போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.


கடுமையான போர் காரணமாக ஈரானில் கடுமையான சேதமடைந்துள்ள நிலையில், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஈரானில் நிலநடுக்கம். போர் பதற்றத்திற்கு மத்தியில் புதிய சிக்கல் ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது அணுசக்தி போட்டி காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.கடுமையான போர் காரணமாக ஈரானில் கடுமையான சேதமடைந்துள்ள நிலையில், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement