• Feb 03 2025

ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம்; உதய கம்மன்பில இன்று முக்கிய அறிவிப்பு..!

Sharmi / Feb 3rd 2025, 8:51 am
image

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தேடி வருவதாக அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம்(03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேடி வருவதாக பொய்யை எழுதி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து நாடகம் நடத்த தயாராகி வருகின்றது.

இது தொடர்பில் சகல ஆதாரங்களுடனும் இன்றைய தினம் விசேட அம்பலப்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம்; உதய கம்மன்பில இன்று முக்கிய அறிவிப்பு. ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தேடி வருவதாக அரசாங்கம் கூறும் பொய் தொடர்பில் இன்றையதினம்(03) நாட்டுக்கு அம்பலப்படுத்தப்படவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை தேடி வருவதாக பொய்யை எழுதி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து நாடகம் நடத்த தயாராகி வருகின்றது.இது தொடர்பில் சகல ஆதாரங்களுடனும் இன்றைய தினம் விசேட அம்பலப்படுத்தப்படவுள்ளது.அந்தவகையில் இன்றையதினம் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement