• May 28 2026

எபோலா அச்சம் தீவிரம்; இந்தியாவுக்கும் ஆபத்தா? கனடாவின் அதிரடி முடிவு

Chithra / May 27th 2026, 12:10 pm
image

சமீபத்தில், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் ‘புந்திபுக்யோ’ வகை எபோலா வைரஸ் காரணமாக தேசிய அளவில் தொற்றுநோய் நிலை ஏற்படும் அபாயம் “மிகவும் அதிகம்” என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.


இந்நிலையில் எபோலா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை, எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அதன் பரவலையும் தடுப்பதற்காக எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.


இதற்கிடையில், கடந்த சில வாரங்களில் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தாலும் நோய் அறிகுறிகள் இல்லாத கனடியப் பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் மே 30 முதல் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா, கனடா மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகளில் இதுவரை எந்தவொரு எபோலா நோயாளியும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை 

எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இந்தியாவிற்கு வருகை தந்த உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதலாவது எபோலா தொற்றுச் சம்பவமாக இது அமையும்.


இந்த நோய் தொற்றிய எவரும் இந்தியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என இந்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்து ஒரு நாளின் பின்னரே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.


28 வயதான இந்த உகாண்டா பெண்ணுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ள போதிலும், அவர் சாதாரண ஆரோக்கிய நிலையிலேயே உள்ளார் என்றும், அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும் சுகாதார தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளன.


கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவிலிருந்து அகமதாபாத் ஊடாக பெங்களூரு நகருக்கு வந்துள்ள இந்த பெண் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் கிடைக்கப் பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எபோலா அச்சுறுத்தலை அடுத்து, இந்தியாவின் வானூர்தி நிலையங்கள் மற்றும் ஏனைய எல்லை நுழைவாயில்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவப் பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நட்டா குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் ஏற்கனவே தனது நாட்டுப் பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எபோலா அச்சம் தீவிரம்; இந்தியாவுக்கும் ஆபத்தா கனடாவின் அதிரடி முடிவு சமீபத்தில், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் ‘புந்திபுக்யோ’ வகை எபோலா வைரஸ் காரணமாக தேசிய அளவில் தொற்றுநோய் நிலை ஏற்படும் அபாயம் “மிகவும் அதிகம்” என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.இந்நிலையில் எபோலா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை, எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அதன் பரவலையும் தடுப்பதற்காக எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.இதற்கிடையில், கடந்த சில வாரங்களில் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தாலும் நோய் அறிகுறிகள் இல்லாத கனடியப் பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் மே 30 முதல் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, கனடா மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகளில் இதுவரை எந்தவொரு எபோலா நோயாளியும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இந்தியாவிற்கு வருகை தந்த உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதலாவது எபோலா தொற்றுச் சம்பவமாக இது அமையும்.இந்த நோய் தொற்றிய எவரும் இந்தியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என இந்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்து ஒரு நாளின் பின்னரே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.28 வயதான இந்த உகாண்டா பெண்ணுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ள போதிலும், அவர் சாதாரண ஆரோக்கிய நிலையிலேயே உள்ளார் என்றும், அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும் சுகாதார தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளன.கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவிலிருந்து அகமதாபாத் ஊடாக பெங்களூரு நகருக்கு வந்துள்ள இந்த பெண் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் கிடைக்கப் பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எபோலா அச்சுறுத்தலை அடுத்து, இந்தியாவின் வானூர்தி நிலையங்கள் மற்றும் ஏனைய எல்லை நுழைவாயில்களில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவப் பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நட்டா குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் ஏற்கனவே தனது நாட்டுப் பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement