• May 18 2024

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவித்தல்!

Chithra / Feb 20th 2024, 8:24 am
image

Advertisement

 

ஆசிரியர் சேவை யாப்பின் படி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மார்ச் மாத இறுதிக்குள் அதற்கான ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்.

20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சேவையை விட்டுச் சென்ற மற்றும் வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் காரணமாக மாகாண மட்டத்தில் 13,500 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், விரைவில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவித்தல்  ஆசிரியர் சேவை யாப்பின் படி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், மார்ச் மாத இறுதிக்குள் அதற்கான ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்.20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், சேவையை விட்டுச் சென்ற மற்றும் வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் காரணமாக மாகாண மட்டத்தில் 13,500 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், விரைவில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement