• Sep 20 2024

கல்வி அதிகாரிகள் தூக்கத்தில்..! - முல்லைத்தீவு வலயத்தில் எழுந்தமானமாக பதியப்படும் மாணவர் வரவுப் பதிவு! samugammedia

Chithra / Jun 11th 2023, 7:27 am
image

Advertisement

முல்லைதீவு வலயத்தின் புதுக்குடியிருப்பு கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் வரவுப் வதிவேட்டை ஆசிரியர்கள் எழுந்தமானமாகப் பதிந்து வருகின்றமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

மாணவர் வரவு பதிவேடானது பதிவதற்காக முதலாம் பாட வேளையின் முடிவில் 10 நிமிடங்கள் கல்வி அமைச்சின் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர் பதிவேட்டை ஓர் நியதி ஆவணமாக கையாண்டு நாளாந்த அடிப்படையில் குறித்த வகுப்பாசிரியர் அல்லது ஏனைய ஒரு ஆசிரியரினால் பதியப்பட வேண்டியது அவசியம்.

இருந்தபோதிலும் மேற்குறித்த பாடசாலையில் கடந்த இரண்டாம் மாதம் மாணவி ஒருவர் வண்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு வருகை தந்ததாக அந்நாள் வரவு பதிவேட்டில் வரவு பதியப்பட்டிருந்தது.

மேலும் குறித்த பாடசாலையில் மாணவர் வரவு புத்தகத்தை ஆசிரியர்கள் தான் பயன்படுத்துகிறார்கள் அல்லது மாணவர்களை பயன்படுத்தி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பதியப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுகிறது.

இவ்வாறான தவறுகளால் படசாலைக்கு ஒழுங்காக வரும் மாணவர்களை பாதிப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் வெளியிடங்களில் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வழி வகுக்கும். 

குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாடசாலை நலன் விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.


கல்வி அதிகாரிகள் தூக்கத்தில். - முல்லைத்தீவு வலயத்தில் எழுந்தமானமாக பதியப்படும் மாணவர் வரவுப் பதிவு samugammedia முல்லைதீவு வலயத்தின் புதுக்குடியிருப்பு கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் வரவுப் வதிவேட்டை ஆசிரியர்கள் எழுந்தமானமாகப் பதிந்து வருகின்றமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.மாணவர் வரவு பதிவேடானது பதிவதற்காக முதலாம் பாட வேளையின் முடிவில் 10 நிமிடங்கள் கல்வி அமைச்சின் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.இம்மாணவர் பதிவேட்டை ஓர் நியதி ஆவணமாக கையாண்டு நாளாந்த அடிப்படையில் குறித்த வகுப்பாசிரியர் அல்லது ஏனைய ஒரு ஆசிரியரினால் பதியப்பட வேண்டியது அவசியம்.இருந்தபோதிலும் மேற்குறித்த பாடசாலையில் கடந்த இரண்டாம் மாதம் மாணவி ஒருவர் வண்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு வருகை தந்ததாக அந்நாள் வரவு பதிவேட்டில் வரவு பதியப்பட்டிருந்தது.மேலும் குறித்த பாடசாலையில் மாணவர் வரவு புத்தகத்தை ஆசிரியர்கள் தான் பயன்படுத்துகிறார்கள் அல்லது மாணவர்களை பயன்படுத்தி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பதியப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுகிறது.இவ்வாறான தவறுகளால் படசாலைக்கு ஒழுங்காக வரும் மாணவர்களை பாதிப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் வெளியிடங்களில் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வழி வகுக்கும். குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாடசாலை நலன் விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement