அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
உள்ளுர் சந்தையில் முட்டையொன்று 50 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், முட்டை இறக்குமதிக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி மாதம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குள் மீண்டும் ஆரம்பமாகும் முட்டை இறக்குமதி அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.உள்ளுர் சந்தையில் முட்டையொன்று 50 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், முட்டை இறக்குமதிக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி மாதம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.