• Mar 31 2025

எதிர்வரும் நாட்களில் முட்டை விலை மீண்டும் உயரலாம்! எச்சரிக்கும் உற்பத்தியாளர்கள்

Chithra / Dec 29th 2024, 9:27 am
image

 

எதிர்வரும் நாட்களில் முட்டையின் விலை மீண்டும் உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், முட்டையின் விலை எதிர்வரும் நாட்களில் உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரித்துள்ளனர்.

மேலும், முட்டை விலை குறைந்தாலும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அத்தோடு முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் முட்டையின் விலை குறைவடைந்ததன் ஊடாக மாத்திரம் வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் முட்டை விலை மீண்டும் உயரலாம் எச்சரிக்கும் உற்பத்தியாளர்கள்  எதிர்வரும் நாட்களில் முட்டையின் விலை மீண்டும் உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன், 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது.அதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.இந்நிலையில், முட்டையின் விலை எதிர்வரும் நாட்களில் உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரித்துள்ளனர்.மேலும், முட்டை விலை குறைந்தாலும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்நிலையில் முட்டையின் விலை குறைவடைந்ததன் ஊடாக மாத்திரம் வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement