லங்கா சதொச நிறுவனங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும்,
கொள்வனவு செய்வதற்கு முட்டைகள் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதால்,
சதொசவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உள்ளூர் முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிகள் தற்போது சந்தையில் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கொழும்பில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
இலங்கையில் முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு. லங்கா சதொச நிறுவனங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போதிலும், கொள்வனவு செய்வதற்கு முட்டைகள் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதால்,சதொசவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், உள்ளூர் முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிகள் தற்போது சந்தையில் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கொழும்பில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.