• Apr 03 2025

வழுக்கி விழுந்த வயோதிபர் மரணம்..! நுவரெலியாவில் சம்பவம்

Chithra / Feb 15th 2024, 3:04 pm
image

 

நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் நேற்று வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று(15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


வழுக்கி விழுந்த வயோதிபர் மரணம். நுவரெலியாவில் சம்பவம்  நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் நேற்று வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார்.நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்று(15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement