• May 22 2026

கோவில் மண்டபத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்; யாழில் துயரம்

Chithra / Oct 20th 2025, 8:43 am
image

 யாழ்ப்பாணம் - அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முருகேசு அராலியைச் சேர்ந்த 81 வயதுடைய கணேசலிங்கம்  என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆலய மண்டபத்தில் உயிரிழந்துள்ளார். 

சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

கோவில் மண்டபத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்; யாழில் துயரம்  யாழ்ப்பாணம் - அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.முருகேசு அராலியைச் சேர்ந்த 81 வயதுடைய கணேசலிங்கம்  என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் நேற்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆலய மண்டபத்தில் உயிரிழந்துள்ளார். சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement