• Nov 25 2024

தபால் மூல வாக்களிப்புக்கான திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!

Chithra / Oct 10th 2024, 10:29 am
image

 

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு  2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement