• Dec 03 2024

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பிப்பு

Anaath / Oct 10th 2024, 10:32 am
image

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். 

இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, இருவரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலையாகாததால் விசாரணையை எதிர்வரும் 19ம் திகதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.


தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பிப்பு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, இருவரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலையாகாததால் விசாரணையை எதிர்வரும் 19ம் திகதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement