• Sep 20 2024

தேர்தலுக்கு தேவையான பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய தேர்தல் ஆணையம் தீர்மானம்

Chithra / Jul 23rd 2024, 8:51 am
image

Advertisement

 

தேர்தலுக்கு தேவையான மை உள்ளிட்ட எழுதுபொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

குறித்த பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏலத்திற்கு நேற்றையதினம்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தலில் பயன்படுத்தத் தேவையான அழியாத மை, எழுதுபொருட்கள், பேனா, பென்சில், கார்பன் பேப்பர், இணைப்பு ஊசிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய போட்டி முறையின் அடிப்படையில் ஏலங்களை ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை திறந்து வைத்து ஏலத்தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தேர்தலுக்கு தேவையான பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய தேர்தல் ஆணையம் தீர்மானம்  தேர்தலுக்கு தேவையான மை உள்ளிட்ட எழுதுபொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.குறித்த பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏலத்திற்கு நேற்றையதினம்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, தேர்தலில் பயன்படுத்தத் தேவையான அழியாத மை, எழுதுபொருட்கள், பேனா, பென்சில், கார்பன் பேப்பர், இணைப்பு ஊசிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.தேசிய போட்டி முறையின் அடிப்படையில் ஏலங்களை ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை திறந்து வைத்து ஏலத்தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement