• Sep 20 2024

அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு! SamugamMedia

Chithra / Feb 19th 2023, 10:28 am
image

Advertisement

தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை நாட்களில் ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும்.

எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு SamugamMedia தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறித்த விடுமுறை நாட்களில் ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும்.எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement