• Nov 28 2024

வாக்களிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்!

Tamil nila / Sep 21st 2024, 1:35 pm
image

வேட்பாளர்கள் வாக்களிக்கும் புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான செய்திகளை இன்று சனிக்கிழமை (21) மாலை 4 மணிக்கு பின்னர் வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களிடம் வலியுறுத்தியுள்ளது.

வாக்களித்ததன் பின்னர் வேட்பாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்களிப்பு மத்திய நிலையத்தில் மாலை 4 மணியளவில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்றும் மாலை 4 மணிவரை மாத்திரம் வாக்களிக்க முடியும் என்பது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மாத்திரமே வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதை தவிர்த்து ஏனையவற்றை புகைப்படம் எடுக்க முடியும் என்பதுடன் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் வேட்பாளர்கள் வாக்களிக்கும் புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான செய்திகளை இன்று சனிக்கிழமை (21) மாலை 4 மணிக்கு பின்னர் வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களிடம் வலியுறுத்தியுள்ளது.வாக்களித்ததன் பின்னர் வேட்பாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.வாக்களிப்பு மத்திய நிலையத்தில் மாலை 4 மணியளவில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்றும் மாலை 4 மணிவரை மாத்திரம் வாக்களிக்க முடியும் என்பது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மாத்திரமே வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதை தவிர்த்து ஏனையவற்றை புகைப்படம் எடுக்க முடியும் என்பதுடன் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement