உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தொடர்பான 128 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (09) மட்டும் இரண்டு குற்றச்செயல்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இச்சம்பவங்களில், ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மார்ச் 3ஆம் திகதியிலிருந்து இதுவரை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மொத்தமாக 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவை தொடர்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 13 பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரின் காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் - பலர் கைது கைப்பற்றப்பட்ட 11 வாகனங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தொடர்பான 128 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (09) மட்டும் இரண்டு குற்றச்செயல்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.இச்சம்பவங்களில், ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, மார்ச் 3ஆம் திகதியிலிருந்து இதுவரை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மொத்தமாக 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இவை தொடர்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 13 பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரின் காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன.