• Apr 13 2025

தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டி ஒட்ட தடை?

Chithra / Apr 10th 2025, 2:19 pm
image

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் தவிர சுவரொட்டிகள் பயன்படுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வீடு வீடாக பிரச்சாரம் செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், செய்தித்தாள் மூலம் தகவல்களை விநியோகித்தல், பொதுக் கூட்டங்கள் மற்றும் தன்னார்வப் பணிகள் மூலம் தேவையான விளம்பரம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் ஒட்டுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டி ஒட்ட தடை  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக ஹேரத் தெரிவித்துள்ளார்.கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் தவிர சுவரொட்டிகள் பயன்படுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், வீடு வீடாக பிரச்சாரம் செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், செய்தித்தாள் மூலம் தகவல்களை விநியோகித்தல், பொதுக் கூட்டங்கள் மற்றும் தன்னார்வப் பணிகள் மூலம் தேவையான விளம்பரம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் ஒட்டுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement