• Nov 22 2024

மன்னாரில் தமிழரசு கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு..!

Sharmi / Oct 18th 2024, 10:20 am
image

பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்றைய தினம்(17)  மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் வைபவ ரீதியாக தமிழரசு கட்சி வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாகவும் கட்சி சார்ந்த தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் மேற்படி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அதே நேரம் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார்  தனியார் விடுதியில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவன்பிட்டி, வட்டகண்டல், வெள்ளிமலை, சாந்திபுரம், தலைமன்னார், பேசாலை, முருங்கன் உள்ளடங்களாக பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் குறித்த ஒன்றுகூடலுக்கு வருகை தந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேநேரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிவமோகன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இவ் வருடம் தேர்தலுக்கான ஆதரவை சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனுக்கு வழங்கியிருந்தார்.





மன்னாரில் தமிழரசு கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு. பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்றைய தினம்(17)  மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் வைபவ ரீதியாக தமிழரசு கட்சி வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாகவும் கட்சி சார்ந்த தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் மேற்படி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.அதே நேரம் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார்  தனியார் விடுதியில் இடம் பெற்றது.மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவன்பிட்டி, வட்டகண்டல், வெள்ளிமலை, சாந்திபுரம், தலைமன்னார், பேசாலை, முருங்கன் உள்ளடங்களாக பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் குறித்த ஒன்றுகூடலுக்கு வருகை தந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.அதேநேரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிவமோகன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இவ் வருடம் தேர்தலுக்கான ஆதரவை சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனுக்கு வழங்கியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement