• Sep 19 2024

யாழ் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே தேர்தல் அலுவலகம் அமைப்பு - சமன் ஹீ ரத்நாயக! samugammedia

Tamil nila / Sep 3rd 2023, 6:30 pm
image

Advertisement

யாழ் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே தேர்தல் அலுவலகம் அமைப்பு செயற்பட வேண்டும்  என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக தெரிவித்துள்ளார். 

யாழில் இன்றையதினம் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் கட்டடமானது நான்கு மாடிக்கான திட்டமாக  இருந்தாலும் பொருளாதார நெருக்கடியால் ஒரு மாடிக் கட்டடமாக  மட்டுப்படுத்தப்பட்டது. 

கச்சேரியில் அரச அதிபரின் கீழ்   தேர்தல் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள போது ஏன் தனியான அலுவலகம் வேண்டும் என்ற கேள்வி எழுந்தது தேர்தல் காலங்களில் அதிகளவான இடம் தேவைப்படுவதால் தான் இவ் அலுவலகததிற்கான தேவை காணப்பட்டது.

யாழ் மாவட்டத்தினுடைய வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே இக் கட்டடத்தின் அமைவு அமைந்துள்ளது.  மக்ளின் வாக்குரிமையைப்  பாதுகாப்பதற்காக ஏனைய அனைத்து சிவில் அமைப்புக்களையும் இணைத்து பணிபுரியுமிடமாக இவ்விடம் செயற்பட வேண்டும்.  எனத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே தேர்தல் அலுவலகம் அமைப்பு - சமன் ஹீ ரத்நாயக samugammedia யாழ் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே தேர்தல் அலுவலகம் அமைப்பு செயற்பட வேண்டும்  என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஹீ ரத்நாயக தெரிவித்துள்ளார். யாழில் இன்றையதினம் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தக் கட்டடமானது நான்கு மாடிக்கான திட்டமாக  இருந்தாலும் பொருளாதார நெருக்கடியால் ஒரு மாடிக் கட்டடமாக  மட்டுப்படுத்தப்பட்டது. கச்சேரியில் அரச அதிபரின் கீழ்   தேர்தல் செயற்பாடுகள் சிறப்பாக உள்ள போது ஏன் தனியான அலுவலகம் வேண்டும் என்ற கேள்வி எழுந்தது தேர்தல் காலங்களில் அதிகளவான இடம் தேவைப்படுவதால் தான் இவ் அலுவலகததிற்கான தேவை காணப்பட்டது.யாழ் மாவட்டத்தினுடைய வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலே இக் கட்டடத்தின் அமைவு அமைந்துள்ளது.  மக்ளின் வாக்குரிமையைப்  பாதுகாப்பதற்காக ஏனைய அனைத்து சிவில் அமைப்புக்களையும் இணைத்து பணிபுரியுமிடமாக இவ்விடம் செயற்பட வேண்டும்.  எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement