• Apr 03 2025

தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு..!

Sharmi / Sep 17th 2024, 11:05 am
image

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக  யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம்(16) கள ஆய்வு செய்யப்பட்டது. 

இக் கள ஆய்வில்   மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  

இக் கள ஆய்வில்  உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.


தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக  யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம்(16) கள ஆய்வு செய்யப்பட்டது. இக் கள ஆய்வில்   மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  இக் கள ஆய்வில்  உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement