• Oct 19 2024

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மின்சார ரயில் பாதை! அமைச்சரின் விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Apr 16th 2023, 6:12 pm
image

Advertisement

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இத்திட்டமானது இயக்க மற்றும் பரிமாற்றம் (BOT) முறையின் கீழ் நிர்மாணிக்கப்படும் என்றும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.

உலகின் ஆறாவது உயரமான புகையிரத நிலையமான கந்தபொல புகையிரத நிலையம் உட்பட பல புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த புகையிரத பாதை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பாரிய வசதிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, பல புதிய ரயில் நிலையங்களை உள்ளடக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மின்சார ரயில் பாதை அமைச்சரின் விசேட அறிவிப்பு samugammedia உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இத்திட்டமானது இயக்க மற்றும் பரிமாற்றம் (BOT) முறையின் கீழ் நிர்மாணிக்கப்படும் என்றும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.உலகின் ஆறாவது உயரமான புகையிரத நிலையமான கந்தபொல புகையிரத நிலையம் உட்பட பல புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த புகையிரத பாதை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பாரிய வசதிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.இதற்கமைய, பல புதிய ரயில் நிலையங்களை உள்ளடக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement