• May 03 2024

பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த மின்சார சபை ஊழியர்களுக்கு சிக்கல்..! அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை

Chithra / Jan 6th 2024, 1:32 pm
image

Advertisement


 

அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மின்சார சபை தலைவருக்கு கடிதமொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் இலங்கை மின்சார சபையின் உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கை மின்சார சபை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அபாயம் நிலவுமென அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் , கொள்முதல் ஆகியவை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கீழ் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்று புதிய வரைபு முன்மொழியப்பட்டுள்ளது.

இது தவிர, மின்சாரத்துறையின் ஒழுங்குமுறை, உரிமம் போன்ற பிரச்சினைகளுக்கு நிறுவனங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுகளும் இதில் அடங்கியுள்ளன.

இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சுற்றுநிரூபத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த 04 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது.

மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த மின்சார சபை ஊழியர்களுக்கு சிக்கல். அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை  அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மின்சார சபை தலைவருக்கு கடிதமொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.அத்துடன் இலங்கை மின்சார சபையின் உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இலங்கை மின்சார சபை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அபாயம் நிலவுமென அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் , கொள்முதல் ஆகியவை நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கீழ் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்று புதிய வரைபு முன்மொழியப்பட்டுள்ளது.இது தவிர, மின்சாரத்துறையின் ஒழுங்குமுறை, உரிமம் போன்ற பிரச்சினைகளுக்கு நிறுவனங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுகளும் இதில் அடங்கியுள்ளன.இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சுற்றுநிரூபத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த 04 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது.மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement