தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறையை பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“நாட்டின் எதிர்காலத்தை குறியீடாக்குதல்” தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சந்திப்பு நேற்று பத்தரமுல்லை வோட்டர் ஸ்டேஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போது தேர்தலுக்காக அரசாங்கம் பாரியதொரு நிதியினை செலவு செய்கின்றது. உங்கள் தலைமையின் கீழ் இலத்திரனியல் வாக்கு முறையினை அறிமுகப்படுத்த முடியாதா? என தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னாள் நீதியரசர் டெப் இனது தலைமையில் இதற்காக ஆணைகுழு ஒன்று நிறுவினோம்.
முதலில் நாம் அதனை பிரதேச சபை தேர்தலில் பரிசீலனை செய்து பார்ப்போம். பின்னர் தேசிய தேர்தல்களில் அதனை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறை ஜனாதிபதி வெளியிட்ட தகவல் தேர்தல்களின் போது இலத்திரனியல் வாக்கு முறையை பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.“நாட்டின் எதிர்காலத்தை குறியீடாக்குதல்” தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சந்திப்பு நேற்று பத்தரமுல்லை வோட்டர் ஸ்டேஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.இதன்போது தேர்தலுக்காக அரசாங்கம் பாரியதொரு நிதியினை செலவு செய்கின்றது. உங்கள் தலைமையின் கீழ் இலத்திரனியல் வாக்கு முறையினை அறிமுகப்படுத்த முடியாதா என தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னாள் நீதியரசர் டெப் இனது தலைமையில் இதற்காக ஆணைகுழு ஒன்று நிறுவினோம். முதலில் நாம் அதனை பிரதேச சபை தேர்தலில் பரிசீலனை செய்து பார்ப்போம். பின்னர் தேசிய தேர்தல்களில் அதனை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.