• Mar 06 2026

திருமலையில் வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு - விசாரணைகள் தீவிரம்

Chithra / Feb 8th 2026, 12:24 pm
image


திருகோணமலை - மொரவெவ, அவ்வைநகர் பகுதியில் வாய்வெடி உட்கொண்ட யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.


யானையின் வாய், வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி  விசாரணையை முன்னெடுத்தார். 


வாய் வெடி உட்கொண்டமையாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இன்றுடன் மொத்தமாக ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.


மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருட்களை பாவித்து மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


திருமலையில் வாய்வெடி உட்கொண்ட யானை உயிரிழப்பு - விசாரணைகள் தீவிரம் திருகோணமலை - மொரவெவ, அவ்வைநகர் பகுதியில் வாய்வெடி உட்கொண்ட யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.யானையின் வாய், வீக்கமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.குறித்த யானை மரணித்தமை தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி  விசாரணையை முன்னெடுத்தார். வாய் வெடி உட்கொண்டமையாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இன்றுடன் மொத்தமாக ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருட்களை பாவித்து மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement