• Dec 14 2024

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Sharmi / Oct 25th 2024, 12:26 pm
image

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் 48 வாக்களிப்பு நிலையங்களில் நாளை நடைபெறவுள்ளது.

அந்தவகையில், தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை குறித்த தேர்தலுக்காக 600 அரச அதிகாரிகளும், 500 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

நாளை (26) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் 48 வாக்களிப்பு நிலையங்களில் நாளை நடைபெறவுள்ளது.அந்தவகையில், தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதேவேளை குறித்த தேர்தலுக்காக 600 அரச அதிகாரிகளும், 500 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி குறிப்பிட்டுள்ளார்.நாளை (26) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement