• May 24 2026

பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்

Chithra / Dec 4th 2025, 12:39 pm
image


போவத்த - வீரபொக்குன பகுதியில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் நேற்று  உயிரிழந்துள்ளார்.


மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்துள்ளார்.


மின்சார சபை ஊழியரான  அனுருத்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அவருக்கு உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது.


பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


2007 ஆம் ஆண்டு தம்புள்ளை ரயில் நிலையத்தில் சாதாரண ஊழியராக பணிக்கு சேர்ந்த 41 வயதான  அனுருத்த குமார, பத்து ஆண்டுகள் அங்கு ஊழியராகப் பணியாற்றிய பின்னர் 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டார். 


2022 ஆம் ஆண்டு முதல் அவர்  ஹெட்டிபொல ரயில் நிலையத்தைச்  சேர்ந்த மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர் போவத்த - வீரபொக்குன பகுதியில் மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் நேற்று  உயிரிழந்துள்ளார்.மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்துள்ளார்.மின்சார சபை ஊழியரான  அனுருத்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அவருக்கு உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது.பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.2007 ஆம் ஆண்டு தம்புள்ளை ரயில் நிலையத்தில் சாதாரண ஊழியராக பணிக்கு சேர்ந்த 41 வயதான  அனுருத்த குமார, பத்து ஆண்டுகள் அங்கு ஊழியராகப் பணியாற்றிய பின்னர் 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டார். 2022 ஆம் ஆண்டு முதல் அவர்  ஹெட்டிபொல ரயில் நிலையத்தைச்  சேர்ந்த மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement