• Apr 21 2026

மன்னாரில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி!

Ziya / Apr 21st 2026, 4:53 pm
image

தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம் ,மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


மன்னார் நகர பிரதேச செயலாளர்  கா.காந்தீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியில்  திணைக்கள தலைவர்கள்,அரச மற்றும் தனியார் தொழில் வழங்குனர்கள்,தொழில் பயிற்சி திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி யை தேடுகின்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளை தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தெழிவூட்டல்கள் வழங்கப்பட்டது.அவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினர்.


மேலும் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற தொழில் கண்காட்சியில் குறித்த இளைஞர்,யுவதிகள்  கலந்து கொண்டு பயன் பெற்றதோடு,தமக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை  வழங்கியுள்ளனர்.

மன்னாரில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம் ,மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் நகர பிரதேச செயலாளர்  கா.காந்தீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியில்  திணைக்கள தலைவர்கள்,அரச மற்றும் தனியார் தொழில் வழங்குனர்கள்,தொழில் பயிற்சி திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி யை தேடுகின்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளை தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தெழிவூட்டல்கள் வழங்கப்பட்டது.அவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினர்.மேலும் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற தொழில் கண்காட்சியில் குறித்த இளைஞர்,யுவதிகள்  கலந்து கொண்டு பயன் பெற்றதோடு,தமக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை  வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement