• Apr 01 2025

சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்; புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Chithra / Mar 26th 2025, 12:44 pm
image


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி 5,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 2,500 ரூபாய் சலுகை விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக, நிவாரணப் பலன்களை எதிர்பார்த்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களில் இருந்து பொருத்தமான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

அதன்படி, 2025-04-01 முதல் 2025-04-13 வரை நாடு முழுவதும் அமைந்துள்ள லங்கா சதோச விற்பனை நிலைய வலையமைப்பு மற்றும் இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன விற்பனை நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு உணவுப் பொதி வழங்கப்படும். 

விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கூட்டு முன்மொழிவின் அடிப்படையில் இது நடைபெறுகிறது.

சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்; புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 5,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 2,500 ரூபாய் சலுகை விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நிவாரணப் பலன்களை எதிர்பார்த்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களில் இருந்து பொருத்தமான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி, 2025-04-01 முதல் 2025-04-13 வரை நாடு முழுவதும் அமைந்துள்ள லங்கா சதோச விற்பனை நிலைய வலையமைப்பு மற்றும் இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன விற்பனை நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு உணவுப் பொதி வழங்கப்படும். விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கூட்டு முன்மொழிவின் அடிப்படையில் இது நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

Advertisement