• Feb 20 2025

ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சி மாநாடு!

Tharmini / Feb 16th 2025, 3:51 pm
image

ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர்.

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

திங்களன்று (17) பாரிஸில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது, பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் இணைந்து கொள்வார் என்று பிரிட்டனின் PA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்காக மூத்த அமெரிக்க அதிகாரிகளை சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா அனுப்புவதாக சனிக்கிழமை அறிவித்தது.

பேச்சுவார்த்தையில் ஐரோப்பா அங்கம் வகிக்காது என்பதையும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட வெள்ளை மாளிகையின் மூத்த பிரமுகர்கள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களை சந்திக்க உள்ளனர்.

உக்ரேனும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தனது நாட்டிற்கு அத்தகைய அழைப்பு வரவில்லை என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சி மாநாடு ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர்.உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்களின் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.திங்களன்று (17) பாரிஸில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது, பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் இணைந்து கொள்வார் என்று பிரிட்டனின் PA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்காக மூத்த அமெரிக்க அதிகாரிகளை சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா அனுப்புவதாக சனிக்கிழமை அறிவித்தது.பேச்சுவார்த்தையில் ஐரோப்பா அங்கம் வகிக்காது என்பதையும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட வெள்ளை மாளிகையின் மூத்த பிரமுகர்கள் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களை சந்திக்க உள்ளனர்.உக்ரேனும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தனது நாட்டிற்கு அத்தகைய அழைப்பு வரவில்லை என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement