• Sep 03 2026

நிலக்கரி கையிருப்பு குறைந்தாலும் மின்விநியோகத்திற்கு தடையில்லை! வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

Chithra / Sep 3rd 2026, 11:04 am
image


நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி இடம்பெறுவதால் மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


நிலக்கரி கையிருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (04) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இரண்டாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் வழமையான முறையில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலைமையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாட்டின் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். 

நிலக்கரி கையிருப்பு குறைந்தாலும் மின்விநியோகத்திற்கு தடையில்லை வலுசக்தி அமைச்சு அறிவிப்பு நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி இடம்பெறுவதால் மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.நிலக்கரி கையிருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (04) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இரண்டாவது நிலக்கரி கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் வழமையான முறையில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலைமையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாட்டின் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement