• Sep 03 2026

திருகோணமலை போர்மயானத்தில் உயிரிழந்த நெதர்லாந்து வீரர்களுக்கு தூதுவர் அஞ்சலி

dorin / Sep 3rd 2026, 11:06 am
image

கிழக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் இரண்டாம் நாளில், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபி டி போயர் (Wiebe de Boer), இரண்டாம் உலகப் போரின்போது உயிரிழந்து திருகோணமலை பொதுநலவாய போர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நெதர்லாந்து நாட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையின் படகில் திருகோணமலை துறைமுகத்தின் அழகிய பகுதிகளை பார்வையிட்ட தூதுவர், பின்னர் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கடற்படை அருங்காட்சியகத்தையும் தூதுவர் பார்வையிட்டார்.

அன்றைய தினத்தின் பின்னர், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய  நோயல் இமானுவேல் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்த தூதுவர், கடற்படை மற்றும் கடல்சார் வரலாற்று அருங்காட்சியகத்திற்கும் விஜயம் செய்தார்.


திருகோணமலை போர்மயானத்தில் உயிரிழந்த நெதர்லாந்து வீரர்களுக்கு தூதுவர் அஞ்சலி கிழக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் இரண்டாம் நாளில், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபி டி போயர் (Wiebe de Boer), இரண்டாம் உலகப் போரின்போது உயிரிழந்து திருகோணமலை பொதுநலவாய போர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நெதர்லாந்து நாட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையின் படகில் திருகோணமலை துறைமுகத்தின் அழகிய பகுதிகளை பார்வையிட்ட தூதுவர், பின்னர் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.மேலும், கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கடற்படை அருங்காட்சியகத்தையும் தூதுவர் பார்வையிட்டார்.அன்றைய தினத்தின் பின்னர், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய  நோயல் இமானுவேல் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்த தூதுவர், கடற்படை மற்றும் கடல்சார் வரலாற்று அருங்காட்சியகத்திற்கும் விஜயம் செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement