ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன்வைக்க முடியாத தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எவ்வாறு தீர்வை பெற்று தருவார்கள் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் தற்போதைய பிரதமர் ஹரிணி அமர சூரிய யாழ்ப்பாணத்திலும் தென் இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் பொறிமுறையின் மூலம் தீர்வைத் தரப்போவதாக கூறிய கருத்துக்களை அவதானித்தோம்.
உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை தருகிறோம் என காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் வாக்குறுதிகள் வழங்கி வரும் நிலையில் அதனை நாம் துளியளவும் ஏற்கவில்லை.
தற்போது பதவியில் உள்ள அரசாங்கம் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை பெற்று தரப் போகிறோம் என கூறுவது அவர்கள் தமது கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்.
தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி அரசாங்கம் இலங்கையில் தமது தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாத காரணத்தால் அவர்களின் உறவுகள் இன்றும் ஐநாவில் நீதி கோரிச் செல்கிறார்கள்.
ஜேவிபியின் செயற்பாட்டாளர்களான லலித் குகன், யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில்குற்றவாளிகள் யார் என அரச உயர் மட்டம் வரை தெரிந்த நிலையில் அவர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜேவிபி தோழர்கள் லலித், குகனுக்கு கூட இன்னும் நீதியை வழங்க முடியாத நிலையில் அரசு லீலாதேவி குற்றச்சாட்டு ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன்வைக்க முடியாத தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எவ்வாறு தீர்வை பெற்று தருவார்கள் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா குற்றம் சாட்டினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்நாட்டின் தற்போதைய பிரதமர் ஹரிணி அமர சூரிய யாழ்ப்பாணத்திலும் தென் இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் பொறிமுறையின் மூலம் தீர்வைத் தரப்போவதாக கூறிய கருத்துக்களை அவதானித்தோம்.உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை தருகிறோம் என காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் வாக்குறுதிகள் வழங்கி வரும் நிலையில் அதனை நாம் துளியளவும் ஏற்கவில்லை.தற்போது பதவியில் உள்ள அரசாங்கம் உள்ளூர் விசாரணை மூலம் தீர்வை பெற்று தரப் போகிறோம் என கூறுவது அவர்கள் தமது கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்.தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி அரசாங்கம் இலங்கையில் தமது தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை பெற்றுத்தர முடியாத காரணத்தால் அவர்களின் உறவுகள் இன்றும் ஐநாவில் நீதி கோரிச் செல்கிறார்கள்.ஜேவிபியின் செயற்பாட்டாளர்களான லலித் குகன், யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில்குற்றவாளிகள் யார் என அரச உயர் மட்டம் வரை தெரிந்த நிலையில் அவர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.