மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் நினைவுகளுடன் நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
"சாந்தன் ஏன் சந்தனமானார்?" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வாருந்தினர் மண்டபம் ஒன்றில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது சாந்தனின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நினைவுரைகள், சிறப்புரைகள் மற்றும் சாந்தன் எழுதிய நூல் தொடர்பான உரைகளும் இடம்பெற்றது.
அத்தோடு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணவன், கலாநிதி ஆறு திருமுருகன், சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன், பேராசிரியர் கே.ரிகணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
"சாந்தன் ஏன் சந்தனமானார்" எனும் தொனிப்பொருளில் நினைவுகளுடன் நிகழ்வு நாள். மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் நினைவுகளுடன் நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. "சாந்தன் ஏன் சந்தனமானார்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வாருந்தினர் மண்டபம் ஒன்றில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டால் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது சாந்தனின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் நினைவுரைகள், சிறப்புரைகள் மற்றும் சாந்தன் எழுதிய நூல் தொடர்பான உரைகளும் இடம்பெற்றது.அத்தோடு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டது.குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணவன், கலாநிதி ஆறு திருமுருகன், சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன், பேராசிரியர் கே.ரிகணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.