தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும், நினைவேந்தலும், யாழ். தென்மராட்சி நாவற்குழி சந்தியில் இன்று(15) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் இ.யோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும், யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில், சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாவற்குழியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும், நினைவேந்தலும், யாழ். தென்மராட்சி நாவற்குழி சந்தியில் இன்று(15) இடம்பெற்றது.இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் இ.யோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும், யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில், சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஷ் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.