• Jun 22 2024

ரணிலின் கரங்களை பலப்படுத்த சகலரும் முன்வரவேண்டும்...! முசாமில் வேண்டுகோள்

Sharmi / Jun 14th 2024, 4:34 pm
image

Advertisement

எமது நாட்டில் எவ்வாறான அபிவிருத்தியை மேற்கொள்ளல் வேண்டும் என்பதுடன் மக்களின் தேவையை இனம் காண்பதற்கும் வலயத்தின் ஊடாக தகவல் அறிந்து நாட்டின் சகல மக்களும் பயணடைய வேண்டும் என்கின்ற வகையில் வலய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என கல்குடா தொகுதி ஐக்கிய தேசி கட்சி அமைப்பாளர் கலாநிதி முசாமில் தெரிவித்தார்.

கடந்த 02 ஆம் திகதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வலய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நியமனக் கடிதங்களை அன்றைய தினம் பெற்றுக்கொள்ளாத கல்குடா தொகுதியைச் சேர்ந்த வாகரை,வாகநேரி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த வலய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை தமது ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அலுவலகத்தில் வைத்து இன்று (14) ஒப்படைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் நாடு எவ்வாறு இருந்தது.இன்று எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்.

நாட்டை விட்டு சிலர் தப்பி ஓடியபோதிலும் ஜனாதிபதி அவர்கள் தனி ஒரு மனிதனாக நின்று நாட்டை பொறுப்பேற்று எங்களுடைய பல்வேறுபட்ட பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்நோக்கி கொண்டு செல்கிறார்.

எனவே அவரது கரங்களை பலப்படுத்த சகலரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ரணிலின் கரங்களை பலப்படுத்த சகலரும் முன்வரவேண்டும். முசாமில் வேண்டுகோள் எமது நாட்டில் எவ்வாறான அபிவிருத்தியை மேற்கொள்ளல் வேண்டும் என்பதுடன் மக்களின் தேவையை இனம் காண்பதற்கும் வலயத்தின் ஊடாக தகவல் அறிந்து நாட்டின் சகல மக்களும் பயணடைய வேண்டும் என்கின்ற வகையில் வலய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என கல்குடா தொகுதி ஐக்கிய தேசி கட்சி அமைப்பாளர் கலாநிதி முசாமில் தெரிவித்தார்.கடந்த 02 ஆம் திகதி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வலய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்த நியமனக் கடிதங்களை அன்றைய தினம் பெற்றுக்கொள்ளாத கல்குடா தொகுதியைச் சேர்ந்த வாகரை,வாகநேரி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த வலய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை தமது ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அலுவலகத்தில் வைத்து இன்று (14) ஒப்படைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,கடந்த காலங்களில் நாடு எவ்வாறு இருந்தது.இன்று எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்.நாட்டை விட்டு சிலர் தப்பி ஓடியபோதிலும் ஜனாதிபதி அவர்கள் தனி ஒரு மனிதனாக நின்று நாட்டை பொறுப்பேற்று எங்களுடைய பல்வேறுபட்ட பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்நோக்கி கொண்டு செல்கிறார்.எனவே அவரது கரங்களை பலப்படுத்த சகலரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement