• Nov 22 2024

ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் எம்முடன் இணையலாம்- லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு..!

Sharmi / Sep 24th 2024, 8:43 am
image

எதிர்வரும் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கதவுகள் திறக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் என்றும் கிரியெல்ல குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்வரும் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியதாகவும், அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் கட்சி விவகாரங்களை இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்பதற்கும் தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவரும் எம்முடன் இணையலாம்- லக்ஷ்மன் கிரியெல்ல அழைப்பு. எதிர்வரும் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கதவுகள் திறக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் என்றும் கிரியெல்ல குறிப்பிட்டார்.ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்வரும் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியதாகவும், அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் கட்சி விவகாரங்களை இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்பதற்கும் தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement