ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய அம்மான் படை என்ற புதிய அமைப்பை ஸ்தாபிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இருந்த முந்தைய நிர்வாகத்தை விமர்சித்துள்ள அவர், அந்த காலகட்டத்தில் தேசத்தின் வீழ்ச்சிக்கு அவரே காரணம் என்றும் தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்வதில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை அங்கீகரித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தற்போதைய தலைமையின் கீழ் தான் நாடு முன்னேற்றத்தைக் கண்டது என்றும் குறிப்பிட்டார்.
விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவானால் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக முரளிதரன் உறுதிப்படுத்தினார்.
புதிதாக நிறுவப்பட்ட இயக்கத்தில் தனது தலைமைத்துவத்தின் கீழ், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்ட புதுமையான உத்திகள் குறித்தும், குறிப்பாக முன்னாள் போராளிகள் மற்றும் போர் விதவைகளின் நலனில் கவனம் செலுத்தப் போவதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர்.
வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை இன்று தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குறுந்தூர் மலை போன்ற பிரச்சனைகளும் உள்ளன.
எங்களுடைய ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள்.
இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு நமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். என்றார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளிவந்த ஆதாரங்கள் - அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும் கருணா பகிரங்கம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய அம்மான் படை என்ற புதிய அமைப்பை ஸ்தாபிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இருந்த முந்தைய நிர்வாகத்தை விமர்சித்துள்ள அவர், அந்த காலகட்டத்தில் தேசத்தின் வீழ்ச்சிக்கு அவரே காரணம் என்றும் தெரிவித்தார்.இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்வதில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை அங்கீகரித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தற்போதைய தலைமையின் கீழ் தான் நாடு முன்னேற்றத்தைக் கண்டது என்றும் குறிப்பிட்டார்.விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவானால் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக முரளிதரன் உறுதிப்படுத்தினார்.புதிதாக நிறுவப்பட்ட இயக்கத்தில் தனது தலைமைத்துவத்தின் கீழ், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்ட புதுமையான உத்திகள் குறித்தும், குறிப்பாக முன்னாள் போராளிகள் மற்றும் போர் விதவைகளின் நலனில் கவனம் செலுத்தப் போவதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை இன்று தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குறுந்தூர் மலை போன்ற பிரச்சனைகளும் உள்ளன.எங்களுடைய ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள்.இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு நமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். என்றார்.