• Apr 15 2026

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு !

Ziya / Apr 9th 2026, 4:08 pm
image

முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை பகுதியில் வீதியோர மரநடுகை நிகழ்வு இன்றையதினம் (09) மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.


கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பள்ளவெளி சனசமூக நிலையம், செந்தமிழ் விளையாட்டு கழகம், மாதர் சங்கம், தெற்கு மற்றும் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளீர் குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக வளாகத்தில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.


கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மஞ்சுளாதேவி பிரதம விருந்தினராகவும் ,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர்  இமக்குலேற்றா புஸ்பானந்தம் சிறப்பு விருந்தினராகவும், வற்றாப்பளை மற்றும் கேப்பாபிலவு கிராம அலுவலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், செந்தமிழ் விளையாட்டு கழகத்தினர், மாதர் சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மகளீர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரநடுகை பணியில் ஈடுபட்டனர்.


இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தமது மாதாந்த சம்பளத்தை மரநடுகை திட்டத்திற்காக வழங்கி முன்மாதிரியான சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.


பசுமை சூழலை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்மரநடுகை நிகழ்வு பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.


கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை பகுதியில் வீதியோர மரநடுகை நிகழ்வு இன்றையதினம் (09) மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பள்ளவெளி சனசமூக நிலையம், செந்தமிழ் விளையாட்டு கழகம், மாதர் சங்கம், தெற்கு மற்றும் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளீர் குழுக்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழக வளாகத்தில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மஞ்சுளாதேவி பிரதம விருந்தினராகவும் ,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர்  இமக்குலேற்றா புஸ்பானந்தம் சிறப்பு விருந்தினராகவும், வற்றாப்பளை மற்றும் கேப்பாபிலவு கிராம அலுவலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், செந்தமிழ் விளையாட்டு கழகத்தினர், மாதர் சங்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மகளீர் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரநடுகை பணியில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. யூட்சன் தமது மாதாந்த சம்பளத்தை மரநடுகை திட்டத்திற்காக வழங்கி முன்மாதிரியான சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.பசுமை சூழலை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இம்மரநடுகை நிகழ்வு பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement